Home Featured உலகம் கோப்பா அமெரிக்கா கிண்ணம் : அர்ஜெண்டினாவைத் தோற்கடித்து சிலி கிண்ணத்தை வென்றது!

கோப்பா அமெரிக்கா கிண்ணம் : அர்ஜெண்டினாவைத் தோற்கடித்து சிலி கிண்ணத்தை வென்றது!

782
0
SHARE
Ad

Copa-America-2016

நியூ ஜெர்சி (அமெரிக்கா) – அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரில் நடைபெற்ற கோப்பா அமெரிக்கா காற்பந்து போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் இன்று அதிகாலை (மலேசிய நேரப்படி) அர்ஜெண்டினாவும், சிலியும் மோதியதில், சிலி வெற்றி பெற்று கிண்ணத்தைக் கைப்பற்றியது.

கோப்பா அமெரிக்கா என்பது, தென் அமெரிக்க நாடுகள் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையில் நடைபெறும் காற்பந்து போட்டிகளாகும். இந்த முறை ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகள் நடைபெறும் அதே காலகட்டத்தில் இந்தப் போட்டிகளும் நடைபெற்றதால், கோப்பா அமெரிக்கா போட்டிகள் அவ்வளவாக பிரபலமாகப் பேசப்படவில்லை.

#TamilSchoolmychoice

இன்றைய இறுதி ஆட்டத்தில், ஆட்டம் முடிந்த 90 நிமிடங்களில் இரண்டு குழுக்களும் கோல் எதுவும் அடிக்காத காரணத்தால், கூடுதலாக 30 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது.

கூடுதல் நேரத்திலும் இரண்டு குழுக்களும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து பினால்டி கோல்களின் மூலம் வெற்றியாளரை நிர்ணயிக்கும் நடைமுறை பின்பற்றப்பட்டது.

இதில் சிலி 4 கோல்களும், அர்ஜெண்டினா 2 கோல்களும் அடிக்க, சிலி வெற்றியாளரானது. அர்ஜெண்டினாவின் முன்னணி ஆட்டக்காரர் லியோனல் மெஸ்ஸி தான் அடிக்கவிருந்த பினால்டியைத் தவற விட்டது அர்ஜெண்டினா காற்பந்து இரசிகர்ளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

கோப்பா அமெரிக்கா கிண்ணத்தை சிலி தொடர்ந்து இரண்டாவது முறையாக கைப்பற்றியிருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.