Home One Line P2 மரடோனா மரணத்தில் சந்தேகம் – மருத்துவ ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன

மரடோனா மரணத்தில் சந்தேகம் – மருத்துவ ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன

674
0
SHARE
Ad

புவனாஸ் ஏர்ஸ் : அண்மையில் மரணமடைந்த அர்ஜென்டினாவின் காற்பந்து வீரர் டியகோ மராடோனாவின் மரணம் குறித்த ஐயப்பாடுகள் எழுந்துள்ளதால் அது தொடர்பான விசாரணைகளை அந்நாட்டு அரசாங்கம் தொடங்கியுள்ளது.

முதல் கட்டமாக, அர்ஜெண்டினியாவின் தலைநகர் புவனாஸ் ஏர்சில் அவரது மருத்துவர் நடத்தும் மருத்துவமனையில் அதிரடி பரிசோதனைகள் நடத்திய அர்ஜென்டினா அதிகாரிகள் மராடோனா குறித்த மருத்துவ ஆவணங்களை கைப்பற்றி இருக்கின்றனர்.

எனினும் இதுவரையில் யாரும் கைது செய்யப்படவில்லை.

#TamilSchoolmychoice

60 வயதான மரடோனா நவம்பர் 25ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். ஏற்கனவே பல உடல்நல கோளாறுகளுடன் அவர் போராடி வந்தார்.