Home One Line P2 பிக்பாஸ் 4 : சம்யுக்தா வெளியேற்றப்பட்டார்

பிக்பாஸ் 4 : சம்யுக்தா வெளியேற்றப்பட்டார்

1376
0
SHARE
Ad

சென்னை : உலகத் தமிழ் தொலைக்காட்சி இரசிகர்களிடையே பிரபலமாகியுள்ள பிக்பாஸ் (4) தொடர் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் 50 நாட்களைக் கடந்து தொடர்ந்து ஒளியேறி வருகிறது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 29)  ஒளியேறிய நிகழ்ச்சியில் பிக்பாஸ் இல்லத்திலிருந்து மாடலிங் துறையில் புகழ்பெற்ற பங்கேற்பாளரான சம்யுக்தா வெளியேற்றப்பட்டார்.

இந்த நிகழ்ச்சித் தொடரில் ஆகக் கடைசியாக பாடகி சுசித்ரா வெளியேற்றப்பட்டார். முதலாவது பங்கேற்பாளராக வெளியேற்றப்பட்டவர் நடிகை ரேகா ஆவார்.

#TamilSchoolmychoice

கடந்த வாரத்தில் 5 பேர் பிக்பாஸ் இல்லத்திலிருந்து வெளியேற்றப்பட பரிந்துரைக்கப்பட்டனர். சம்யுக்தா, சோம் சேகர், சனம், ரமேஷ், நிஷா ஆகியோரே அந்த ஐவராவர்.

இதில் சோம் சேகர், சனம், நிஷா ஆகிய மூவரும் காப்பாற்றப்பட்டிருப்பதாக கமல்ஹாசன் முதலில் அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து எஞ்சிய இருவரான சம்யுக்தா, ரமேஷ் ஆகிய இருவருக்கும் இடையிலான போட்டியில் சம்யுக்தா வெளியேற்றப்படுவதாக கமல்ஹாசன் அறிவித்தார்.

அதன் பின்னர் அவர் வழக்கம்போல் சம்யுக்தாவை மேடைக்கு அழைத்து நிகழ்ச்சி குறித்த அவரது அனுபவங்களையும், சக பங்கேற்பாளர்களுடனான அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.