Home Featured நாடு நெஞ்சுவலி காரணமாக சஞ்சீவன் மருத்துவமனையில் அனுமதி!

நெஞ்சுவலி காரணமாக சஞ்சீவன் மருத்துவமனையில் அனுமதி!

562
0
SHARE
Ad

SANJEEVAN-685x320கோலாலம்பூர் – ‘மைவாட்ச்’ குற்றத் தடுப்பு இயக்கத்தின் தலைவர் டத்தோ ஸ்ரீசஞ்சீவன், லேசான நெஞ்சு வலி காரணமாக சிரம்பான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

“அவருக்கு லேசான மாரடைப்பு. இதனால் அவரது வலது கையில் வலி ஏற்பட்டுள்ளது” என்று சஞ்சீவனுக்கு நெருக்கமான சிலர், ‘தி ஸ்டார்’ இணையதளத்திடம் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜூன் 23-ம் தேதி, சூதாட்ட மைய நிர்வாகியை மிரட்டிப் பணம் பறித்ததாகக் காவல்துறை அவரைக் கைது செய்த போதே, அவர் கடும் காய்ச்சலில் இருந்ததாகவும், ஆனால் காவல்துறை அவரை சிகிச்சைக்கு அழைத்துச் செல்லவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice