Home Featured தமிழ் நாடு சுவாதி கொலை: புதிய காணொளி ஆதாரம் கிடைத்தது!

சுவாதி கொலை: புதிய காணொளி ஆதாரம் கிடைத்தது!

975
0
SHARE
Ad

chennai-swathi-murderசென்னை – சென்னை நுங்கம்பாக்கம் இரயில் நிலையத்தில் பெண் பொறியியலாளர் சுவாதி, மர்ம நபரால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில், புதிய காணொளி ஆதாரம் ஒன்று காவல்துறைக்குக் கிடைத்துள்ளது.

ஏற்கனவே, கிடைத்த இரகசிய கண்காணிப்பு கேமரா ஆதாரத்தை வைத்து காவல்துறை சந்தேகப்பட்டு வந்த இளைஞர் தான் இக்கொலையை செய்திருக்க வேண்டும் என்பதற்கு கூடுதல் ஆதாரமாகப் புதிய காணொளி ஒன்று கிடைத்துள்ளது.

இரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள வீதியில் நடந்து வரும் அந்நபர் பின்னர் இரயில் நிலையத்தில் இருந்து ஓடுவது போல் கட்டிடம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த இரகசிய கேமராவில் அக்காட்சிகள் பதிவாகியுள்ளன.

#TamilSchoolmychoice

கொலை நடந்த போது, இரயில் நிலையத்தில் இருந்தவர்களும், அக்காணொளியில் காணப்படும் நபர் கொலையாளி என உறுதிப்படுத்தியிருப்பதாகவும் கூறப்படுகின்றது.

புதிய தலைமுறை செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அந்தக் காணொளி இங்கே: