Home Featured நாடு நஜிப் அறிவித்த புதிய அமைச்சரவை மாற்றங்கள்!

நஜிப் அறிவித்த புதிய அமைச்சரவை மாற்றங்கள்!

586
0
SHARE
Ad

Selliyal-Breaking-News-3-512கோலாலம்பூர்: பிரதமர் நஜிப் இன்று திங்கட்கிழமை அறிவித்த அமைச்சரவை நியமனங்களில் சில முக்கிய மாற்றங்கள்:

  • துணை நிதி அமைச்சரான சுவா தீ யோங் இனி அனைத்துலக, வாணிப, தொழிலியல் அமைச்சின் துணையமைச்சராக செயல்படுவார்

  • பிரதமர் துறை துணையமைச்சராக டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி நியமிக்கப்பட்டுள்ளார்.

  • அனைத்துலக வாணிப, தொழிலியல் அமைச்சின் நடப்பு துணையமைச்சரான லீ சீ லியோங் இனி, துணை நிதி அமைச்சராகப் பொறுப்பேற்பார்.

  • சரவாக் மாநிலத்தின் லாவாஸ் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹென்ரி சம் அகோங் உள்நாட்டு வாணிப, கூட்டுறவு மற்றும் பயனீட்டாளர் அமைச்சின் துணையமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

  • சீலாம் (சபா) நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் டத்து நஸ்ருன் டத்து மன்சூர் தோட்டத் தொழில், மூலப்பொருள் அமைச்சின் துணை அமைச்சராக நியமனம்.

  • ஜெர்லுன் (கெடா) நாடாளுமன்ற உறுப்பினர் ஒத்மான் அசிஸ் துணை நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

  • ஜோஹாரி அப்துல் கனி இரண்டாவது நிதி அமைச்சராக நியமனம் பெற்றுள்ளார். இதற்கு முன் இவர் துணை நிதி அமைச்சராகப் பதவி வகித்து வந்தார்.

  • அப்துல் ரஹ்மான் டஹ்லான் பிரதமர் துறையின் அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். பிரதமர் துறையின் பொருளாதாரத் திட்டமிடல் பிரிவின் நடவடிக்கைகளை இனி அவர் கவனிப்பார். இதற்கு முன் டத்தோஸ்ரீ வாஹிட் ஓமார் பிரதமர் துறையின் பொருளாதாரத் திட்டமிடல் பிரிவைக் கண்காணித்து வந்தார். வாஹிட் ஓமாரின் 3 ஆண்டு கால செனட்டர் பதவிக் காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து அவர் மீண்டும் அமைச்சராகத் தொடர விரும்பவில்லை.

  • நடப்பு இரண்டாவது நிதி அமைச்சர் அகமட் ஹூஸ்னி தனது சொந்த காரணங்களுக்காக அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார்.

  •  கெராக்கான் கட்சித் தலைவரும், நடப்பு பிரதமர் துறை அமைச்சருமான மா சியூ கியோங் தோட்டத் தொழில், மூலப் பொருள் அமைச்சராக பதவியேற்கின்றார்.

  • முன்னாள் விவசாய, மற்றும் விவசாயத் தொழில் சார்ந்த அமைச்சராகப் பணியாற்றிய டான்ஸ்ரீ நோ ஓமார், மீண்டும் அமைச்சரவைக்குத் திரும்புகின்றார். நகர்ப்புற மேம்பாடு, வீடமைப்பு, மற்றும் ஊராட்சி அமைச்சராக அவர் இனி பொறுப்பேற்பார். சிலாங்கூர் மாநில அம்னோ பொறுப்பாளருமான நோ ஓமார் அண்மையில் சுங்கை பெசார் நாடாளுமன்றத் தொகுதியில் கடுமையாகப் பாடுபட்டு பெற்ற வெற்றிக்குப் பரிசாக அமைச்சராக நியமிக்கப்படுகின்றார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.