Home Featured நாடு தேவமணி செனட்டராகவும், பிரதமர் துறை துணையமைச்சராகவும் நியமனம்!

தேவமணி செனட்டராகவும், பிரதமர் துறை துணையமைச்சராகவும் நியமனம்!

851
0
SHARE
Ad

Datuk-SK-Devamany-1கோலாலம்பூர் – இன்று பிரதமர் நஜிப் துன் ரசாக் அறிவித்த அமைச்சரவை மாற்றங்களின்படி, மஇகா தேசியத் துணைத் தலைவர், டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி செனட்டராக நியமிக்கப்பட்டு, பிரதமர் துறையின் துணையமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனத்தின் மூலம், மஇகாவுக்கு கூடுதலான அங்கீகாரமும் அரசியல் பலமும் வழங்கப்பட்டுள்ளது.

கட்சியின் தேசியத் துணைத் தலைவரான தேவமணி துணையமைச்சராகவும் நியமனம் பெறுவதன் மூலம் மஇகாவின் அரசியல், அரசாங்க, கட்சி நடவடிக்கைகளில் மேலும் விரிவான அளவில் ஈடுபட முடியும் என்பதோடு, இந்திய சமுதாயம் குறித்த விவகாரங்களிலும் மேலும் தீவிரமாக பங்கு பெற முடியும்.