பூனாஸ் ஐரெஸ் – அர்ஜெண்டினாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 43 வயதான கன்னியாஸ்திரி ஒருவர் இறக்கும் தருவாயிலும் மகிழ்ச்சியுடன் சிரித்தபடியே மரணமடைந்திருப்பது பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்திருக்கிறது.
கடந்த 6 மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த செசிலா மரியா என்ற அவர், கடந்த ஜூன் 22-ம் தேதி சிகிச்சைப் பலனின்றி மரணமடைந்தார்.
ஆனால் அவர் நோய் வாய்ப்பட்டிருந்த 6 மாத காலமும் தனக்குப் பிடித்த வயலின் இசையை இசைத்து ரசித்துக் கொண்டும், ஜெபம் செய்து கொண்டும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்துள்ளார்.
கடைசியாக அவர் எழுதிய குறிப்பு ஒன்றில், “நான் என்னுடைய இறுதி ஊர்வலம் எப்படி இருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறேன். முதலில் சில பிரார்த்தனைகளும், பின்னர் எல்லோரும் கொண்டாடும் வகையிலும் அமைய வேண்டும். பிரார்த்தனை செய்ய மறக்காதீர்கள், அதே நேரத்தில் கொண்டாடவும் மறக்காதீர்கள்” என்று எழுதியுள்ளார்.