Home Featured தமிழ் நாடு சுவாதி கொலையில் யாரும் கைது செய்யப்படவில்லை!

சுவாதி கொலையில் யாரும் கைது செய்யப்படவில்லை!

556
0
SHARE
Ad

Swathi-chennai-girl-murderedசென்னை : பொறியியலாளர் சுவாதி கொலை வழக்கில், இருவர் கைது செய்யப்பட்டதாக நேற்று தகவல்கள் பரவியதை அடுத்து, சென்னை காவல் துறையினர் இந்தத் தகவலை மறுத்துள்ளனர். விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில் இதுவரையில் யாரும் கைது செய்யப்படவில்லை.

சென்னை காவல் துறையினர் தனிப்படை அமைத்து இந்த கொலை வழக்கை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையில், புகைப்படக் கருவிகளில் பதிவான நபரின் புகைப்படத்தையும், வரைபடத்தையும் காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர். படத்தில் உள்ள நபர்தான் கொலை செய்தவன் என்பதை கொலையை நேரில் பார்த்த இரயில் நிலைய உணவக ஊழியர் ஒருவரும், சுவாதியின் தோழியும் அடையாளம் காட்டியுள்ளனர்.

#TamilSchoolmychoice

கொலை செய்ததாக நம்பப்படும் நபர் இரண்டு நாட்களாக சுவாதியைப் பின்தொடர்ந்து அவருடன் பேசியதைத் தான் பார்த்ததாக சுவாதியின் தோழி உறுதிப்படுத்தியுள்ளார்.

சுவாதியின் நண்பரும் உறுதிப்படுத்தினார் 

சுவாதியுடன் வேலை செய்யும் நண்பர் ஒருவரும், நபர் ஒருவர் தன்னைப் பின்தொடர்வதாக சுவாதி தன்னிடம் கூறியதாக காவல் துறையிடம் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் கொலையாளி பயன்படுத்திய கத்தி வழக்கமாக தமிழகத்தில் பயன்படுத்தப்படும் வகையானது அல்லது என்றும், மைசூர், கர்நாடகா மாநிலப் பகுதிகளில் பயன்படுத்தப்படும் வித்தியாசமான அரிவாள் என்றும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, கொலையாளி கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவனாக இருக்கலாம் என்ற சந்தேகமும், அல்லது வழக்கை திசை திருப்புவதற்காக அத்தகைய கத்தியை அவன் பயன்படுத்தியிருக்கலாம் என்றும் காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்.