Home Featured நாடு கூட்டரசுப் பணியாளர்களுக்கு ஜூலை 8 விடுமுறை!

கூட்டரசுப் பணியாளர்களுக்கு ஜூலை 8 விடுமுறை!

774
0
SHARE
Ad

alihamsaகோலாலம்பூர் – ரமடான் பண்டிகையை முன்னிட்டு ஜூலை 8-ம் தேதி, வெள்ளிக்கிழமை கூட்டரசுப் பணியாளர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

எனினும், ரமடான் பண்டிகை ஜூலை 6-ம் தேதி வந்தால் மட்டுமே, ஜூலை 8-ம் தேதி விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை ரமடான் பண்டிகை ஜூலை 5-ம் தேதி வந்தால், இந்த விடுமுறை கிடையாது என அரசாங்கத் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ டாக்டர் அலி ஹம்சா தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

 

மேலும், கூட்டரசுச் சேவைகளை நாடவிருக்கும் பொதுமக்கள் விடுமுறை நாட்களுக்கு முன்பாகவே முகவர்களையும், அந்தத் துறைகளையும் அணுகும் படியும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.