‘ஆன் டிமாண்ட்’ என்பது நாம் விரும்புகின்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை நாம் விரும்புகின்ற நேரத்தில் நாமே உடனுக்குடன் தேர்ந்தெடுத்துப் பார்த்துக் கொள்ளும் நடைமுறையைக் கொண்ட சேவையாகும்.
இந்த மேம்படுத்தப்பட்ட சேவையில் உலகிலுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளைத் தேர்ந்தெடுக்கும் அதே வேளையில் ஆன் டிமாண்டின் உள்ளடக்கம் நூலகத் தொகுப்பும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
அஸ்ட்ரோ தமிழ் நிகழ்ச்சிகள் பிரிவின் முதுநிலை உதவித் தலைவர் டாக்டர் இராஜாமணி செல்லமுத்து இந்தப் புதிய சேவை குறித்து கூறுகையில் “இன்று பிரபலமாக உள்ள ஆன் டிமாண்ட் (On Demand), தற்போது உங்கள் திரை ஆன் டிமாண்ட் சேவையாக, வாடிக்கையாளர்களுக்கு என்ன நிகழ்ச்சிகள் தேவை, எப்போது தேவை மற்றும் எங்கே தேவை ஆகியவற்றின் அடிப்படையில், பல்வேறு பொழுதுப் போக்கு அம்சங்களை உள்ளடக்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை வழங்குகின்றது” எனத் தெரிவித்துள்ளார்.
அஸ்ட்ரோ தற்போது 350,000 இணைக்கப்பட்ட பெட்டி வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. அவர்களுள் அதிகமானோர் நிகழ்ச்சிகளை ஆன் டிமாண்ட் வாயிலாக கண்டுக் களிக்க பிவிஆர் – உடன் இணைந்துள்ளார்கள்.
மேம்படுத்தப்பட்டிருக்கும் இந்த ஆன் டிமாண்ட் சேவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிகழ்ச்சிகளை எங்களுடைய வாடிக்கையாளர்கள் கண்டு களிக்க வேண்டும். அதே வேளையில், ஆன் டிமாண்ட் பார்ப்பவர்களின் எண்ணிக்கை உயர வேண்டும் என்பதையும் எதிர்பார்க்கிறோம். கடந்த ஆண்டைக் காட்டிலும் ஆன் டிமாண்ட் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. ஆகவே, மலேசியர்கள் தங்களுடைய வாழ்க்கை முறை தேவைகளுக்குப் பொருந்தும் முறையில் பொழுதுபோக்கு அனுபவத்தைப் பெறுவதை விரும்புவதாக டாக்டர் இராஜாமணி மேலும் கூறினார்.
உங்கள் திரை ஆன் டிமாண்ட்
உள்ளூர் தயாரிப்பில் வெளிவந்த வல்லவர், ரசிக்க ருசிக்க மற்றும் திகில் போன்ற நிகழ்ச்சிகளை வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பிய நேரத்தில் உங்கள் திரை சேவையின் வழி கண்டு களிக்கலாம்.
குழந்தைகளுக்கென்று பிரத்யேகமாக நூற்றுக்கும் மேற்பட்ட அத்தியாயங்களைக் கொண்ட சோட்டா பீம், அர்ஜூன், பால் ராம் மற்றும் எஸ்டேட் போய் போன்ற நிகழ்ச்சிகளையும் வழங்குகின்றது.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தவிர்த்து, உங்கள் திரை ஆன் டிமாண்ட் திரையரங்குகளில் சமீபத்தில் வெளிவந்த பிரபலமான, பிரம்மாண்டமான முதல் நிலை தமிழ்த் திரைப்படங்களான நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளிவந்த 24, உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளிவந்த மனிதன் போன்ற படங்களையும் வழங்குகின்றது.
அதோடு, குடும்பத்தோடு எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும், சமீபத்தில் வெளிவந்த அல்லது பழைய வெற்றிப் படங்களைக் கண்டுக் களிக்கலாம்.
வெளிநாட்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் – திரைப்படங்கள்
புதிய அதிநவீன பயனர் இடைமுகம் (User Interface)
மேம்படுத்தப்பட்டிருக்கும் இந்த ஆன் டிமாண்ட் பயனர் இடைமுகம், பரிந்துரைக்கப்பட்ட முக்கிய அம்சங்களை ‘TV Shows for You’ மற்றும் ‘Movies for You’ மூலம் அறிமுகப்படுத்துகின்றது.
வித்தியாசமான பார்க்கும் அனுபவத்தை வழங்கும் இந்த பயனர் இடைமுகம் வாடிக்கையாளர்களின் விருப்பமான நிகழ்ச்சிகளையும் ஒரே மாதிரியான உள்ளடக்கங்களைக் கொண்ட நிகழ்ச்சிகளையும் அறிமுகப்படுத்துகின்றது.
மேலும், மேம்படுத்தப்படுத்தப்பட்ட ஆன் டிமாண்ட் சேவையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்தப் பயனர் இடைமுகம் வாடிக்கையாளர்கள் திரையில் முழு ஆன் டிமாண்ட் அட்டவணையை (On Demand catalogue) எளிதாக அணுகுவதற்கு வழிவகுக்கின்றது. இதனை, திரையில் காணப்படும் “Home” எனும் சொல்லை தேர்வுச் செய்து “On Demand”-ஐ தேர்ந்தெடுத்து அங்கு தொலைக்காட்சி அலைவரிசைகளின் சின்னங்கள், நவீன மற்றும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட நிகழ்ச்சிகளின் தோற்ற வடிவங்களைக் (போஸ்டர்களைக்) காணலாம்.
அனைத்து அஸ்ட்ரோ வாடிக்கையாளர்களுக்கும் இந்த ஆன் டிமாண்ட் சேவை வழங்கப்படுகின்றது. எளிதாகக் கூறவேண்டுமானால் பிவிஆர் (Personal Video Recorder) -ஐ உங்களது வீட்டு கட்டற்ற இணைய சேவை (Wifi) உடன் இணைத்தோ அல்லது அஸ்ட்ரோ ஆன் தி கோ (AOTG) மூலம் உங்கள் திரையில் தேர்வு செய்தோ, ஆன் டிமாண்ட் சேவையைப் பயன்படுத்தி நிகழ்ச்சிகளைக் கண்டு களிக்கலாம்.
இந்தப் புதிய பயனர் இடைமுகம் அனைத்து அஸ்ட்ரோ பிவிஆரில் தானாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளப்படலாம். ஆகையால், மேம்படுத்தப்பட்ட இந்த மென்பொருளைப் பெறுவதற்கு வாடிக்கையாளர்கள் தங்களுடைய பிவிஆர் (Personal Video Recorder) – ஐ எப்பொழுதும் தயார் நிலையில் (standby mode) வைத்து கொள்ள வேண்டும்.
மேல் விவரங்களுக்கு www.watchod.com என்ற இணையதளத்தை வலம் வரலாம்.