Home Featured தமிழ் நாடு சுவாதி கொலை : திடுக்கிடும் புதிய தகவல்கள்!

சுவாதி கொலை : திடுக்கிடும் புதிய தகவல்கள்!

610
0
SHARE
Ad

Swathi-murder-chennaiசென்னை – இன்போசிஸ் பொறியியலாளர் சுவாதி கொலை வழக்கில் காவல் துறையின் வசம் கிடைத்துள்ள புதிய காணொளிகள் மூலம், மற்றும் நடத்தப்பட்ட விசாரணைகள் மூலம்  கீழ்க்காணும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன:

  • சுவாதியைக் கொலை செய்யப்படுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னால் ஒரு நபர் சுவாதியைக்  கன்னத்தில் அறைந்ததைப் பார்த்ததாக தமிழரசன் என்ற நபர் தெரிவித்திருக்கின்றார்.
  • அதே தமிழரசன் சுவாதி கொலையைப் பார்த்ததாகவும், பின்னர் கொலையாளியை விரட்டிச் சென்றதாகவும் தெரிவித்திருக்கின்றார். ஆனால், கொலையாளி தண்டவாளத்தில் குதித்து தப்பித்து ஓடி விட்டான் என்றும் சூளைமேடு சாலைப் பகுதியில் ஓடிவிட்டான் என்றும் அவர் மேலும் தெரிவித்திருக்கின்றார்.
  • பயணி ஒருவர் தப்பித்து ஓடிய கொலையாளி மீது கற்களை எடுத்து வீசியதாகவும் தமிழரசன் தெரிவித்துள்ளார்.
  • சுவாதி  சில நிமிடங்களில் இறந்துவிட்டார் என்றும், அதிர்ச்சி அடைந்த நிலையில் அடுத்து வந்த இரயிலில் தான் ஏறிச் சென்று விட்டதாகவும் தமிழரசன் கூறியுள்ளார்.
  • கொலையைச் செய்து விட்டு கொலையாளி மோட்டார் சைக்கிளில் ஏறித் தப்பிச் சென்றிருக்கின்றான் என்பது காணொளிப் பதிவுகள் மூலம் தெரிய வருகின்றது.