Home Featured நாடு பூச்சோங்கில் வெடிகுண்டு இருந்ததாக வந்தத் தகவல் வதந்தி – காவல்துறை அறிவிப்பு!

பூச்சோங்கில் வெடிகுண்டு இருந்ததாக வந்தத் தகவல் வதந்தி – காவல்துறை அறிவிப்பு!

682
0
SHARE
Ad

bomb hoax puchongகோலாலம்பூர் – பூச்சோங் பெர்மாய் அருகே உள்ள சுற்று வளைவில் வெடிகுண்டு புதைக்கப்பட்டிருப்பதாக இன்று வெள்ளிக்கிழமை பேஸ்புக், வாட்சாப் போன்ற நட்பு ஊடகங்களில் பரவிய தகவலை மலேசியக் காவல்துறை மறுத்துள்ளது.

குறிப்பிடத்தக்க அந்த இடத்தில் வெடிகுண்டு நிபுணர்களோடு காவல்துறை நடத்திய சோதனையில் அப்படி எதுவும் அங்கு இல்லை என்பது உறுதியாகியிருப்பதாக சுபாங் ஜெயா காவல்துறைத் தலைமை துணை ஆணையர் மொகமட் அஸ்லின் செடாரி தெரிவித்துள்ளார்.

சில பொறுப்பில்லாத நபர்களால் அப்படி ஒரு புரளி பரப்பிவிடப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice