Home Featured நாடு பூச்சோங் பாலியல் சம்பவம்: 2-வது சந்தேக நபர் 12-வது மாடியிலிருந்து குதித்து மரணம்!

பூச்சோங் பாலியல் சம்பவம்: 2-வது சந்தேக நபர் 12-வது மாடியிலிருந்து குதித்து மரணம்!

892
0
SHARE
Ad

Puchongrapecaseசெர்டாங் – கடந்த வாரம் பூச்சோங் பண்டார் கின்ராராவில் உள்ள சூதாட்ட விடுதியில் பணியாற்றிக் கொண்டிருந்த பெண் ஒருவரை இரு நபர்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி, கொள்ளையடித்த சம்பவத்தில் ஏற்கனவே ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், இரண்டாவது நபரை காவல்துறையினர் தேடி வந்தனர்.

இந்நிலையில், நேற்று வியாழக்கிழமை, தாமான் செத்தாப்பா ஜெயாவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் 12-வது மாடியிலுள்ள வீடு ஒன்றில், அந்நபர் பதுங்கியிருப்பதாக வந்த தகவலையடுத்து காவல்துறையினர் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, அவ்வீட்டின் கதவைப் பல முறை அதிகாரிகள் தட்டியும் உள்ளே இருந்த நபர்கள் வீட்டைத் திறக்கவில்லை என்றும், பின்னர் காவல்துறையினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, அச்சந்தேக நபர், சமயற்கட்டின் ஜன்னல் வழியாக வெளியே குதித்துவிட்டதாகவும் காவல்துறை கூறுகின்றது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், 12-வது மாடியிலிருந்து குதித்ததால், அந்நபருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டு, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே இறந்துவிட்டதாகவும் காவல்துறைத் தரப்பில் இருந்து தகவல்கள் கூறுகின்றன.