Home நாடு தேர்தல் 14: கோபிந்த் சிங் டியோ மீண்டும் பூச்சோங்கில் போட்டி!

தேர்தல் 14: கோபிந்த் சிங் டியோ மீண்டும் பூச்சோங்கில் போட்டி!

1616
0
SHARE
Ad

கோலாலம்பூர் – 14-வது பொதுத்தேர்தலில், ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் டியோ, மீண்டும் பூச்சோங் நாடாளுமன்றத் தொகுதியிலேயே போட்டியிடுவார் என ஜசெக பொதுச்செயலாளர் லிம் குவான் எங் இன்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.

முன்னதாக பூச்சோங் தொகுதியில், கோபிந்த் சிங் டியோவின் தங்கை சங்கீத் கவுர் டியோ நிறுத்தப்படலாம் என ஆரூடங்கள் கூறப்பட்டு வந்தன.

இந்நிலையில், பூச்சோங்கில் மீண்டும் கோபிந்த் சிங் டியோ போட்டியிடுவது இன்று உறுதியாகியிருக்கிறது.

#TamilSchoolmychoice

கடந்த 2013 பொதுத் தேர்தலில் பூச்சோங் தொகுதியில் போட்டியிட்ட கோபிந்த் சிங், 32,802 வாக்குகள் பெரும்பான்மையில் கெராக்கான்-தேசிய முன்னணி வேட்பாளரான கோகிலன் பிள்ளையைத் தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.