Home நாடு ஸ்கூடாய் சட்டமன்றத்தில் மஇகா போட்டி

ஸ்கூடாய் சட்டமன்றத்தில் மஇகா போட்டி

1212
0
SHARE
Ad

சிகாமாட் – ஜோகூர் மாநிலத்தில் மஇகா ஒரு நாடாளுமன்றம் மற்றும் 4 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் என்பதை மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் இன்று ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தினார்.

சிகாமாட் நாடாளுமன்றத்தில் தான் போட்டியிடவிருப்பதை டாக்டர் சுப்ரா ஏற்கனவே அறிவித்துவிட்டார்.

மற்ற நான்கு சட்டமன்றங்கள், காம்பீர், கஹாங், தெங்காரோ மற்றும் ஸ்கூடாய் என்பதையும் டாக்டர் சுப்ரா உறுதிப்படுத்தினார். 2013-ஆம் ஆண்டில் காம்பீர், கஹாங், தெங்காரோ ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்ற மஇகா, புத்ரி வாங்சா தொகுதியில் தோல்வியடைந்தது.

#TamilSchoolmychoice

புத்ரி வாங்சாவில் மஇகாவின் சார்பில் போட்டியிட்ட எம்.சூரியநாராயணன் பாஸ் கட்சி வேட்பாளரிடம் தோல்வியைத் தழுவினார்.

இதன் காரணமாக, தற்போது புத்ரி வாங்சா தொகுதிக்குப் பதிலாக ஸ்கூடாய் தொகுதி மஇகாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதையும் டாக்டர் சுப்ரா உறுதிப்படுத்தினார்.

சிகாமாட் நாடாளுமன்றத் தொகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய போது டாக்டர் சுப்ரா இந்தத் தகவலை உறுதிப்படுத்தினார்.