Home நாடு சிகாம்புட்டில் லோகா பாலமோகன் போட்டி

சிகாம்புட்டில் லோகா பாலமோகன் போட்டி

1116
0
SHARE
Ad
கூட்டரசுப் பிரதேச நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேசிய முன்னணி வேட்பாளர்கள்

கோலாலம்பூர் – இன்று ஞாயிற்றுக்கிழமை காலையில் தேசிய முன்னணியின் தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் வெளியிட்ட கூட்டரசுப் பிரதேச நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேசிய முன்னணி வேட்பாளர்களின் பட்டியல்படி, மைபிபிபி கட்சியைச் சேர்ந்த டத்தோ லோகா பாலமோகன், சிகாம்புட் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

லோகா பாலமோகன் தற்போது கூட்டரசுப் பிரதேச துணையமைச்சராகவும் செனட்டராகவும் பதவி வகித்து வருகிறார்.

கூட்டரசுப் பிரதேச தேசிய முன்னணி வேட்பாளர்கள் பட்டியல்

கூட்டரசுப் பிரதேசத்தின் மற்ற வேட்பாளர்கள்

கெப்போங் தொகுதியில் ஓங் சியாங் லியாங், பத்து தொகுதியில் டொமினிக் லாவ் போட்டியிடுகின்றனர். இவர்கள் இருவரும் கெராக்கான் கட்சியைச் சேர்ந்தவர்கள்.

#TamilSchoolmychoice

மசீச வாங்சா மாஜூ, புக்கிட் பிந்தாங், செபுத்தே, செராஸ் ஆகிய 4 தொகுதிகளில் போட்டியிடுகின்றது.

செத்தியாவங்சா, தித்திவாங்சா, லெம்பா பந்தாய், புத்ரா ஜெயா, பண்டார் துன் ரசாக், லாபுவான் ஆகிய 6 தொகுதிகளில் அம்னோ போட்டியிடுகிறது.

இன்று வெளியிடப்பட்ட பட்டியலின்படி சர்ச்சைக்குரிய பண்டார் துன் ரசாக் தொகுதி அம்னோவுக்கு ஒதுக்கப்பட்டு அங்கே அட்னான் பின் செமான் போட்டியிடுகிறார்.

செத்தியாவங்சா தொகுதியில் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவுக்கான மலேசியத் தூதருமான டான்ஸ்ரீ சுல்ஹஸ்னான் பின் ராபிக் அம்னோ சார்பில் போட்டியிடுகிறார்.

இதன் காரணமாக, அவர் தனது அமெரிக்கத் தூதர் பதவியிலிருந்து விலகுவார் என்றும் தெங்கு அட்னான் அறிவித்தார்.

எதிர்பார்த்தபடி லெம்பா பந்தாய் தொகுதியில் ராஜா நோங் சிக் போட்டியிடுகின்றார்.

தித்திவாங்சா தொகுதியில் இரண்டாவது நிதியமைச்சர் ஜொஹாரி பின் அப்துல் கனி போட்டியிடுகின்றார்.

சபா மாநிலத்தில் உள்ள கூட்டரசுப் பிரதேசமான லாபுவான் நாடாளுமன்றத் தொகுதியில் ரோஸ்மான் பின் இஸ்லி அம்னோ சார்பாக போட்டியில் குதிக்கிறார்.