Home நாடு பத்து கவான்: கஸ்தூரி பட்டுவுக்கு மீண்டும் வாய்ப்பு

பத்து கவான்: கஸ்தூரி பட்டுவுக்கு மீண்டும் வாய்ப்பு

897
0
SHARE
Ad
கஸ்தூரி ராணி பட்டு – பத்து கவான் நாடாளுமன்ற வேட்பாளர்

ஜோர்ஜ் டவுன் – சில சலசலப்புகளுக்குப் பின்னர் பினாங்கு மாநிலத்தின் பத்து கவான் நாடாளுமன்றத் தொகுதிக்கு ஜசெக வேட்பாளராக கஸ்தூரி ராணி பட்டு மீண்டும் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே, வெளிவந்த தகவல்களின்படி கஸ்தூரி தனது பூர்வீக மாநிலமான மெங்களம்பு தொகுதியில் நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. மெங்களம்பு தொகுதி ஒரு காலத்தில் கஸ்தூரியின் மறைந்த தந்தையும் ஜசெகவில் என்றும் நினைவுகூரப்படும் தலைவர்களில் ஒருவருமான பி.பட்டு போட்டியிட்டு வென்ற தொகுதியாகும்.

எனினும், சனிக்கிழமை (21 ஏப்ரல் 2018) பினாங்கு முதல்வரும், ஜசெக தலைமைச் செயலாளருமான லிம் குவான் எங் அறிவித்த, பினாங்கு மாநிலத்திற்கான நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகளுக்கான ஜசெக வேட்பாளர்களின் பட்டியலில் கஸ்தூரியின் பெயரும் இடம் பெற்றிருந்தது.

#TamilSchoolmychoice

பினாங்கு மாநிலத்தில் 7 நாடாளுமன்றத் தொகுதிகளிலும், 19 சட்டமன்றத் தொகுதிகளிலும் ஜசெக போட்டியிடுகிறது. வேட்பாளர்களில் ஐவர் பெண்களாவர். அவர்களில் கஸ்தூரியும் ஒருவராவார்.