Home நாடு பினாங்கு மாநிலத் தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புதிர்ப் போட்டி 2018

பினாங்கு மாநிலத் தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புதிர்ப் போட்டி 2018

1264
0
SHARE
Ad

தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தகவல் தொடர்பு தொழில்நுட்பத் திறனறிவில் சிறந்த நிலையில் உருவாக்கும் முயற்சியில் தித்தியான் டிஜிட்டல் எனும் திட்டத்தை கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கம் & மலேசிய சமூக கல்வி அறவாரியமும் கடந்த 2009-ம் ஆண்டு முதல் மிகச் சிறப்பாக நடத்தி வருகின்றனர்.

இத்திட்டத்தின் வழி மாணவர்களின் தகவல் தொடர்பு தொழில்நுட்பத் திறனறிவை மேலும் மேலோங்கச் செய்யவும், புறநகர், நகர்புற மாணவர்களிடையே அமையப்பெற்ற தகவல் தொடர்பு திறனறிவை (ICT) இடைவெளியை குறைக்க இத்திட்டம் பெரும் பங்காற்றி வருகின்றது. அதை தொடர்ந்து, மலேசியாவில் உள்ள அனைத்து தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்காகவும் கடந்த 4 வருடங்களாக தேசிய நிலையிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டியை வழிநடத்தி வருகின்றனர்.

இப்போட்டியின் வழி மாணவர்களின் படைப்பாற்றல் திறனையும், உருவாக்கத் திறனையும், தகவல் தொடர்பு தொழில்நுட்ப திறனையும் மேலோங்கச் செய்ய வழிவகுக்கின்றது. இதில் 5 போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதில் தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புதிர்ப்போட்டி மட்டுமே மாநில அளவில் நடைபெற்று வருகிறது.

#TamilSchoolmychoice

இவ்வாண்டு பினாங்கு மாநில நிலையிலான புதிர்ப்போட்டியில் பினாங்கிலுள்ள அனைத்து தமிழ்ப்பள்ளியும் கலந்துக் கொண்டது சிறப்புக்குரியது. நான்காவது வருடமாக நடத்தப்படும் இப்போட்டியில் ஒரு மாநிலத்தைச் சேர்ந்த அனைத்து தமிழ்ப்பள்ளிகளும் கலந்துக் கொண்டது இதுவே முதன்முறை.

இம்மாநிலம் போலவே மற்ற அனைத்து மாநிலங்களிலுள்ள தமிழ்ப்பள்ளிகளும் இப்போட்டிகளில் கலந்து சிறப்பிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம். இப்போட்டிற்கு மைநாடி அறவாரியமும், இத்திட்டத்திற்கு SEDIC அமைப்பும் பேருதவிப் புரிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பினாங்கு மாநில அளவிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புதிர்ப் போட்டி, நேற்று ஏப்ரல் 21 (சனிக்கிழமை) டிஸ்டெட் காலேஜ், பினாங்கில் சிறப்பாக நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சியில், பினாங்கு, பாயான் லெப்பாஸ் தொகுதியின் மலேசியக் கல்வி, சமூக ஆய்வு அறவாரியத்தின் (EWRF) துணைத்தலைவர் பன்னிர்செல்வம் சுப்ரமணியம் சிறப்பு பிரமுகராக கலந்துக் கொண்டு, மாணவர்களுக்கு பரிசுகளை எடுத்து வழங்கினார்.

அவர் தம் உரையில், இவ்வகையான போட்டிகளில் அதிகமான தமிழ்ப்பள்ளிகள் கலந்துக் கொண்டு மேன்மேலும் நன்மை அடைய வேண்டுமென கேட்டுக்கொண்டார். பினாங்கு மாநிலத்தில் மட்டும் தான் அனைத்து தமிழ்ப்பள்ளி மாணவர்களும் கலந்துக் கொண்டு இந்நிகழ்வை மேன்மேலும் சிறப்பு செய்தனர். அனைத்து தமிழ்ப்பள்ளிகளுக்கும் அவர் தனது நன்றியை தேரிவித்துக் கொண்டார். மேலும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் அவசியத்தையும், காலத்தின் கட்டாயத்தையும் விவரித்துக் கூறினார். தொடர்ந்து சிறந்ததொரு பணியைச் செய்து வரும் கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கத்திற்கும், தித்தியான் டிஜிட்டல் திட்டத்திற்கும் தனது நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார். மேலும் எதிர்காலத்தில் தொழில்துறையில் தொழிநுட்பத்தை மேம்படுத்த வேண்டும் என்றார்.

பினாங்கு மாநில அளவிலான தகவல் தொடர்பு தொழில் நுட்பப் புதிர்ப் போட்டியில் வெற்றிப்   பெற்ற பள்ளிகள்:

* மாநில அளவிலான போட்டியில் வெற்றிப்பெற்ற முதல் 15 நிலை வெற்றியாளர்கள், தேசிய நிலை போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.