Home நாடு பிறை சட்டமன்றம்: இராமசாமி மீண்டும் போட்டி

பிறை சட்டமன்றம்: இராமசாமி மீண்டும் போட்டி

1140
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன் – பினாங்கு மாநிலத்தின் துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி (படம்) மீண்டும் பிறை சட்டமன்றத் தொகுதிக்குப் போட்டியிடுவார் என ஜசெக தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் அறிவித்தார்.

இன்று சனிக்கிழமை (21 ஏப்ரல் 2018) காலை பினாங்கு மாநிலத்திற்கான நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகளுக்கான ஜசெக வேட்பாளர்களின் பட்டியலை பினாங்கு முதல்வரும், ஜசெக தலைமைச் செயலாளருமான லிம் குவான் எங் அறிவித்தார்.

பினாங்கு மாநிலத்தில் 7 நாடாளுமன்றத் தொகுதிகளிலும், 19 சட்டமன்றத் தொகுதிகளிலும் ஜசெக போட்டியிடுகிறது. வேட்பாளர்களில் ஐவர் பெண்களாவர்.

#TamilSchoolmychoice

அதன்படி பிறை சட்டமன்றத் தொகுதிக்குப் போட்டியிடும் இராமசாமி, அந்தத் தொகுதியில் மஇகா-தேசிய முன்னணி சார்பிலான வேட்பாளரை எதிர்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாரம்பரியமாக மஇகா போட்டியிட்டு வந்துள்ள பிறை சட்டமன்றத் தொகுதியில் இம்முறையும் மஇகா போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், வேட்பாளர் பெயரை மஇகா தலைமைத்துவம் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

பிறை சட்டமன்றத் தொகுதியில் இராமசாமி மீண்டும் வெற்றி பெற்றால் மூன்றாவது தவணைக்கு பினாங்கு துணை முதல்வராக நியமிக்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 2008 முதல் இராமசாமி பினாங்கு மாநிலத்தின் துணை முதல்வராகப் பணியாற்றி வருகிறார்.