Home நாடு சிகாம்புட் தொகுதியில் லோகா பாலமோகன் போட்டியா?

சிகாம்புட் தொகுதியில் லோகா பாலமோகன் போட்டியா?

1048
0
SHARE
Ad
Loga Bala Mohan 2
டத்தோ லோகா பாலமோகன்

கோலாலம்பூர் – நாளை ஞாயிற்றுக்கிழமை (22 ஏப்ரல் 2018) காலை புத்ரா உலக வாணிப மையத்தில், கூட்டரசுப் பிரேதச நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை கூட்டரசுப் பிரதேச அமைச்சரும், தேசிய முன்னணி தலைமைச் செயலாளருமான தெங்கு அட்னான் அறிவிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கூட்டரசுப் பிரதேசத்திலுள்ள சிகாம்புட் நாடாளுமன்றத் தொகுதியில் மைபிபிபி கட்சியின் சார்பில், நடப்பு கூட்டரசுப் பிரதேச துணையமைச்சர் டத்தோ லோகா பாலமோகன் போட்டியிடுவார் என்றும் தேசிய முன்னணி வேட்பாளர்களின் பட்டியலில் அவரது பெயரும் இடம் பெற்றுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

மைபிபிபி கட்சிக்கு கேமரன் மலை ஒதுக்கப்படாது என்ற தேசிய முன்னணியின் முடிவைத் தொடர்ந்து சிகாம்புட் தொகுதி அக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. எனினும் சிகாம்புட்டில் தான் போட்டியிடப் போவதில்லை என மைபிபிபி கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ கேவியஸ் ஏற்கனவே அறிவித்து விட்டார்.

#TamilSchoolmychoice

இதனைத் தொடர்ந்துதான் லோகா பாலமோகன் அங்கு போட்டியிடுவார் எனத் தெரிகிறது.