Home நாடு சிகாம்புட் : ஹன்னா இயோ ஜசெக சார்பில் போட்டி

சிகாம்புட் : ஹன்னா இயோ ஜசெக சார்பில் போட்டி

842
0
SHARE
Ad
ஹன்னா இயோ – ஜசெகவின் சிகாம்புட் நாடாளுமன்ற வேட்பாளர்

பெட்டாலிங் ஜெயா – சுபாங் ஜெயா சட்டமன்ற உறுப்பினராக 2008, 2013 என இரண்டு தவணைகளாக ஜசெகவின் சார்பில் வெற்றி பெற்று வந்திருக்கும் சிலாங்கூர் சட்டமன்ற அவைத் தலைவர் ஹன்னா இயோ சிகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினராகப் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று திங்கட்கிழமை பெட்டாலிங் ஜெயாவில் ஜசெகவின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

ஜசெகவின் நடப்பு சிகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினரான லிம் லிப் எங் கெப்போங் தொகுதியில் போட்டியிடுவார்.