Home நாடு கெப்போங்: டான் செங் கியாவுக்கு மீண்டும் வாய்ப்பில்லை

கெப்போங்: டான் செங் கியாவுக்கு மீண்டும் வாய்ப்பில்லை

785
0
SHARE
Ad

பெட்டாலிங் ஜெயா – கூட்டரசுப் பிரதேசத்திலுள்ள கெப்போங் நாடாளுமன்றத் தொகுதியை கடந்த 8 தவணைகளாக வெற்றிகரமாகத் தற்காத்து வந்திருக்கும் ஜசெகவின் டான் செங் கியாவ் மீண்டும் இங்கே போட்டியிட அவருக்கு ஜசெக தலைமைத்துவம் வாய்ப்பு வழங்கவில்லை.

மாறாக, அவருக்குப் பதிலாக ஜசெகவின் நடப்பு சிகாம்புட் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினரான லிம் லிப் எங் கெப்போங் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவார் என ஜசெகவின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் அறிவித்தார்.

75 வயதான டான் செங் கியாவ், சுமார் 36 ஆண்டுகளாக கெப்போங் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வந்திருக்கிறார். கடந்த 2013 பொதுத் தேர்தலில் 40,307 வாக்குகள் பெரும்பான்மையில் அவர் கெப்போங் தொகுதியில் வெற்றி பெற்றார்.