கோலாலம்பூர்: பெண்கள், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு முன்னாள் துணை அமைச்சர் ஹன்னா இயோ, மார்ச் மாதம் குழந்தை திருமணம் தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டது தொடர்பாக புக்கிட் அமானுக்கு அழைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
“எனது டுவிட்டர் தொடர்பான விசாரணை தொடர்பாக ஓர் அறிக்கையை வழங்க புக்கிட் அமான் என்னை அழைத்தது.
“இப்போது, என்னால் ஒரு கேள்வியைக் கூட கேட்க முடியாது.” என்று அவர் ஒரு டுவிட்டர் பதிவில் பதிவிட்டுள்ளார்.
மூன்று மாதங்களுக்கு முன்பு, நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து குழந்தை திருமணத்தை எதிர்ப்பதற்கான தேசிய வரைவு திட்டம் குறித்து இயோ கவலை தெரிவித்திருந்தார்.
மார்ச் 9-ஆம் தேதி தனது டுவிட்டரில், தமக்கு பதிலாக பாஸ் கட்சியின் சித்தி ஜைலா முகமட் யூசோப் நியமிக்கப்பட்ட பின்னர் இந்த திட்டம் குறித்து என்ன நடக்கும் என்று கேள்வி எழுப்பினார்.
குழந்தை திருமணத்திற்கான காரணங்களைக் கையாள்வதற்கான தேசிய மூலோபாயத் திட்டம் ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது, இது தொடர்பான மாநில அளவிலான சட்டங்கள், விதிகள் மற்றும் வழிகாட்டுதல்கள் கூட்டாட்சி கொள்கைகளுக்கு ஏற்ப இருப்பதை உறுதிசெய்கிறது.
குழந்தைத் திருமணத்திற்கான காரணம் வறுமை மற்றும் கல்விக்கான அணுகல் இல்லாமை என அடையாளம் காணப்பட்ட ஆறு காரணிகளை நிவர்த்தி செய்வதற்கான திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் இந்த திட்டத்தில் இடம்பெற்றிருந்தன.