Home One Line P1 சினி இடைத்தேர்தல்: 8 வேட்பு மனு பாரங்கள் வாங்கப்பட்டுள்ளன

சினி இடைத்தேர்தல்: 8 வேட்பு மனு பாரங்கள் வாங்கப்பட்டுள்ளன

538
0
SHARE
Ad

குவாந்தான்: சினி இடைத்தேர்தலுக்காக மொத்தம் எட்டு வேட்பு மனு பாரங்கள் பகாங் தேர்தல் ஆணையம் அலுவலகத்திலிருந்து இன்றுவரை வாங்கப்பட்டுள்ளது.

நான்கு பாரங்களை தேசிய முன்னணி பிரதிநிதிகள் வாங்கியதாகவும், நான்கு பாரங்கள் சுயேட்சை பிரதிநிதிகளாலும் வாங்கப்பட்டதாகவும் பகாங் தேர்தல் ஆணைய இயக்குநர் டத்தோ ஜம்ரீ ஹம்லி தெரிவித்தார்.

வேட்புமனு பாரம் மே 15 முதல் பகாங் தேர்தல் ஆணைய அலுவலகத்திலும், இங்குள்ள பெக்கான் மாவட்டம் மற்றும் நில அலுவலகத்திலும் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

மே 6-ஆம் தேதி கோலாலம்பூர் மருத்துவமனையில் டத்தோஸ்ரீ அபுபக்கர் ஹருன் இறந்ததைத் தொடர்ந்து சினி மாநில சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

முன்னதாக , ஜூலை 4-ஆம் தேதி சினி இடைத்தேர்தல் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.