Home One Line P1 கொவிட்19: 151 புதிய தொற்றுகள் பதிவு!

கொவிட்19: 151 புதிய தொற்றுகள் பதிவு!

619
0
SHARE
Ad

சிங்கப்பூர்: கொவிட்19 தொற்றுநோய்க்கு மத்தியில் ஜூன் 19- ஆம் தேதி மீண்டும் இரண்டாம் கட்டமாக சிங்கப்பூரில் பல்வேறு தளர்வுகள் ஏற்பட உள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் கொவிட்-19 தொற்றுக்கு கூடுதலாக 151 சம்பவங்களை சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

சமீபத்திய தொற்று புள்ளிவிவரங்கள்படி, இப்போது 40,969 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

“இதுவரை எங்கள் விசாரணைகளின் அடிப்படையில், சமூகத்தில் இரண்டு சம்பவங்கள் உள்ளன, அவை இரண்டும் பணி தேர்ச்சி பெற்றவர்கள். சிங்கப்பூர் அல்லது நிரந்தர வதிவிட சம்பவங்கள் எதுவும் இல்லை.” என்று சுகாதார அமைச்சகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

பெரும்பான்மையானோர் இன்னும் தங்குமிடங்களில் வசிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் என்று அமைச்சகம் குறிப்பிட்டது.

நேற்று பிற்பகுதியில் வெளியிடப்பட்ட ஒரு முழு தரவுகளில், சிங்கப்பூர் 1,799 சமூக சம்பவங்களை இதுவரையிலும்பதிவு செய்துள்ளது. 581 சம்பவங்கள் இறக்குமதி செய்யப்பட்டவை. 38,438 சம்பவங்கள் வெளிநாட்டுத் தொழிலாளர்களைடையே பரவித் தொற்றாகும்.

திங்கட்கிழமை நண்பகல் நிலவரப்படி, மொத்த நோயாளிகளில் 30,366 அல்லது சுமார் 74 விழுக்காடு பேர் தொற்றுநோயிலிருந்து முழுமையாக மீண்டு மருத்துவமனைகள் அல்லது சமூக பராமரிப்பு வசதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.