Home One Line P1 கொவிட்19: 333 பேர் குணமடைந்துள்ளனர்- 11 புதிய தொற்றுகள் பதிவு

கொவிட்19: 333 பேர் குணமடைந்துள்ளனர்- 11 புதிய தொற்றுகள் பதிவு

133
0
SHARE

புத்ரா ஜெயா: மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11 புதிய கொவிட்19 பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டதாக சுகாதாரத் தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து நாட்டின் மொத்த கொவிட்19 பாதிப்பு எண்ணிக்கை 8,505-ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக அடையாளம் காணப்பட்ட 11 பாதிப்புகளில், 1 சம்பவம் இறக்குமதி சம்பவமாகும். எஞ்சிய 10 பேர் உள்ளூரிலேயே தொற்று கண்டவர்கள். 6 பேர் வெளிநாட்டினர், 4 பேர் மலேசியர்கள்.

இன்று 333 பேர் குணமடைந்து வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 7,733-ஆக உயர்ந்தது.

651 பேர் இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 4 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

Comments