Home நாடு ஜசெக வேட்பாளர்கள்: செராஸ், புக்கிட் பிந்தாங், செபுத்தே தொகுதிகளில் மாற்றமில்லை

ஜசெக வேட்பாளர்கள்: செராஸ், புக்கிட் பிந்தாங், செபுத்தே தொகுதிகளில் மாற்றமில்லை

616
0
SHARE
Ad
கூ.பிரதேச ஜசெக வேட்பாளர்கள் (இடமிருந்து) ஹன்னா இயோ, லிம் லிப் எங், டான் கோக் வாய், தெரசா கோக், போங் குயி லுன்

பெட்டாலிங் ஜெயா – கூட்டரசுப் பிரதேசத்தில் போட்டியிடும் ஜசெக வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் இன்று திங்கட்கிழமை பெட்டாலிங் ஜெயாவில் அறிவித்தார்.

அதன்படி, செராஸ், புக்கிட் பிந்தாங், செபுத்தே ஆகிய தொகுதிகளில் நடப்பு வேட்பாளர்களே மீண்டும் நிறுத்தப்படுகிறார்கள்.

செராஸ் தொகுதியில் ஜசெகவின் தலைவர் டான் கோக் வாய் போட்டியிடுவார். புக்கிட் பிந்தாங் தொகுதியில் போங் குயி லுன் போட்டியிடுகிறார்.

#TamilSchoolmychoice

செபுத்தே தொகுதியில் மீண்டும் தெரசா கோக் போட்டியிடுகிறார்.

இதற்கிடையில் சிகாம்புட் தொகுதியில் சுபாங் சட்டமன்ற உறுப்பினர் ஹன்னா இயோ போட்டியிடுகிறார்.

சிகாம்புட் தொகுதியின் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினரான லிம் லிப் எங் சிகாம்புட் தொகுதிக்கு அடுத்து இருக்கும்  தொகுதியான கெப்போங் தொகுதியில் போட்டியிடுகிறார்.