Home Featured நாடு பூச்சோங் பாலியல் வல்லுறவு சம்பவம்: பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார்!

பூச்சோங் பாலியல் வல்லுறவு சம்பவம்: பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார்!

892
0
SHARE
Ad

Puchongrapecaseசெர்டாங் – கடந்த வாரம் வியாழக்கிழமை பூச்சோங் பண்டார் கின்ராராவில் சூதாட்ட விடுதி ஒன்றில், இரு கொள்ளையர்களால் பாலியல் வல்லுறவுக்கு ஆளான பெண் செவ்வாய்க்கிழமை காவல்துறையில் புகார் அளித்தார்.

இது குறித்து செர்டாங் ஓசிபிடி துணை ஆணையர் மெகாட் மொகமட் அமினுடின் மெகாட் அலியாஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், செவ்வாய்க்கிழமை மாலை, 33 வயதான அந்த இந்தோனிசியப் பெண், மாவட்ட காவல்துறைத் தலைமையகத்திற்கு வந்து புகார் அளித்தார் என்று தெரிவித்தார்.

“அப்பெண் அளித்த புகாரின் படி, சம்பவம் நடந்த நேரத்தில் வங்காள தேச ஆடவர் ஒருவருடன் அவ்விடுதியில் பணியாற்றிக் கொண்டிருந்த போது, இரண்டு சந்தேக நபர்களும், அவ்விடுதியில் நுழைந்து, வாடிக்கையாளர்கள் போல் நடித்து, அங்கிருந்த வங்காள தேச ஆடவரிடம் கொள்ளையடித்திருக்கின்றனர்” என்று மெகாட் மொகமட் அமினுடின் மெகாட் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice