Home Featured உலகம் யூரோ: பரபரப்பான ஜெர்மனி-இத்தாலி மோதல்!

யூரோ: பரபரப்பான ஜெர்மனி-இத்தாலி மோதல்!

991
0
SHARE
Ad

Euro-germany-italy-

பாரிஸ் – கால் இறுதி ஆட்டங்களுக்கான கட்டத்தை அடைந்துள்ள ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகளில் இன்று மிக முக்கியமான – அதே சமயம், உலகம் முழுவதும் காற்பந்து இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் – போட்டி நடைபெறுகின்றது.

காற்பந்து உலகின் மிகப் பெரிய ஜாம்பவான்களாகக் கருதப்படும் ஜெர்மனியும், இத்தாலியும் மோதும் ஆட்டம்தான் இன்று மிகவும் எதிர்பார்க்கப்படும் ஆட்டமாகும்.

#TamilSchoolmychoice

ஜெர்மனி காற்பந்து விளையாட்டில் மிகவும் பலம் வாய்ந்த குழுவைக் கொண்ட நாடாக இருந்தாலும், கடந்த எட்டு ஆட்டங்களில் ஓர் ஆட்டத்தில் கூட, இத்தாலியை அது வெற்றி கொண்டதில்லை என்பது சுவாரசியமான ஒரு தகவலாகும். இதனை முறியடிக்கும் விதமாக இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஜெர்மனி வெற்றி பெறுமா அல்லது மீண்டும் பழைய இராசிப்படி இத்தாலியே வெற்றி பெறுமா என்பதுதான் காற்பந்து இரசிகர்களின் மனங்களில் ஓடிக் கொண்டிருக்கும் கேள்வியாகும்.

மலேசிய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.00 மணிக்கு ஜெர்மனி-இத்தாலி இடையிலான ஆட்டம் நடைபெறுகின்றது.euro-germany-italy-shop vegetables

ஜெர்மானியத் தலைநகர் பிராங்பர்ட்டில் உள்ள ஒரு காய்கறிக் கடையில், இன்று நடைபெறும் காற்பந்து விளையாட்டை முன்னிட்டு, ஜெர்மனி-இத்தாலி இரு நாடுகளின் கொடிகளின் வண்ணங்களுக்கேற்ப, காய்கறிகளை விற்பனைக்காக புதுமையாக அணிவகுத்து வைத்திருக்கும் கடைக்காரர்….