Home Featured உலகம் மலேசியா, இந்தோனிசியாவுக்கு எதிராகப் போரை அறிவித்தது ஐஎஸ்!

மலேசியா, இந்தோனிசியாவுக்கு எதிராகப் போரை அறிவித்தது ஐஎஸ்!

695
0
SHARE
Ad

ISIS malaysiaகோலாலம்பூர் – இஸ்லாமியக் கொள்கைகளைப் பின்பற்றாத தலைவர்களையும், அரசாங்கத்தையும் கவிழ்த்து, இஸ்லாமிய மேலாதிக்கத்தை அமல்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு.

அந்த வகையில், மலேசியா, இந்தோனிசியா ஆகிய நாடுகளின் மீது தங்களது அடுத்தக்கட்ட தாக்குதலுக்குத் தயாராவதாகவும் அறிவித்துள்ளது.

இது குறித்து ஐஎஸ் சார்பில் வெளியிடப்பட்ட காணொளியில் இடம்பெற்றுள்ள காட்சிகள் குறித்து ‘தி ஸ்டார்’ இணையதளம் வெளியிட்டுள்ள தகவலில், “தெரிந்து கொள்ளுங்கள்.. இனி நாங்கள் உங்கள் குடிமகன்கள் கிடையாது. உங்களிடமிருந்து எங்களை விடுவித்துக் கொண்டோம்” என அக்காணொளியில் உள்ள ஒருவன் மலேசியக் கடப்பிதழை வீசியெறிய, சுற்றி நின்றிருந்த சிறுவர்கள் உட்பட பலர் அதை ஆமோதித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

மேலும், “அவரின் அனுமதியோடு, உதவியோடு, நாங்கள் எங்களது இராணுவப் படையோடு உங்களிடம் வருகின்றோம். உங்களால் அதை எதிர்கொள்ள முடியாது. இது அல்லா எங்களுக்கு அளித்த வாக்குறுதி” என்றும் அவன் தெரிவித்துள்ளதாக ஸ்டார் குறிப்பிட்டுள்ளது.

இறுதியாக அவர்கள் தங்களது மலேசிய கடப்பிதழை வீசியெறிந்து அதனை நெருப்பும் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.