ஐஎஸ் அமைப்பு மலேசிய மண்ணில் நிகழ்த்தியிருக்கும் முதல் தாக்குதல் இது, இன்னும் அடுத்தடுத்த தாக்குதலுக்கு அந்த அமைப்பு தயாராகி வருகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “இந்தத் தாக்குதலை நிகழ்த்திய இருவரும் நாட்டின் மூத்த தலைவர்கள், உயர் காவல்துறை அதிகாரிகள் மற்றும் நீதித்துறையில் இருக்கும் மூத்த உறுப்பினர்களையும் குறி வைத்துள்ளனர். காரணம் அவர்களது நடவடிக்கைகளுக்கு இந்த மூன்று பிரிவைச் சேர்ந்தவர்கள் தான் தடையாக இருப்பதாக எண்ணுகின்றனர்”
“சிரியாவைச் சேர்ந்த ஐஎஸ் போராளியான முகமட் வான்டி மொகமட் ஜெடி மூலமாக அவர்கள் நேரடியாகத் தகவல்களையும் பெறுகின்றனர்” என்று நேற்று திங்கட்கிழமை புக்கிட் அம்மானில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.