Home Featured இந்தியா புதிய இந்திய அமைச்சரவை: 6 பேர் நீக்கம் – 19 புதிய அமைச்சர்கள் இணைப்பு!

புதிய இந்திய அமைச்சரவை: 6 பேர் நீக்கம் – 19 புதிய அமைச்சர்கள் இணைப்பு!

615
0
SHARE
Ad

Narendra Modi-US Parliament speechபுதுடில்லி – இந்தியா முழுவதும் தற்போது காத்திருப்பது, புதிதாக நரேந்திர மோடி மாற்றியமைக்கப் போகும் இந்திய அமைச்சரவையில் இடம் பெறப் போகும் புதுமுகங்கள் யார்? நீக்கப்படப்போகும் அமைச்சர்கள் யார்? என்பது போன்ற தகவல்களுக்காகத்தான்!

இந்திய நேரப்படி காலை 11.00 மணிக்கு (மலேசிய நேரம் பிற்பகல் 1.30 மணி)  மோடியின் புதிய அமைச்சரவை அதிபர் மாளிகையில் பதவியேற்கின்றது.

புதிய அமைச்சரவையில் நடப்பு அமைச்சர்கள் 6 பேர் பதவி விலகிக் கொள்வார்கள் என்றும் முழு அமைச்சர்களும், இணை அமைச்சர்களும் கொண்ட 19 பேர் கொண்ட புதிய குழுவினர் அமைச்சரவையில் இணைவார்கள் என்றும் ஆரூடங்கள் தெரிவிக்கப்படுகின்றன.

#TamilSchoolmychoice

அடுத்த வருடம் நடைபெறப் போகும் நாட்டின் மிக முக்கிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் மாநில சட்டமன்றத் தேர்தல்களை மனதில் வைத்து இந்த புதிய அமைச்சரவை மாற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாக தகவல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.