Home Featured உலகம் இந்தோனிசிய காவல்நிலையத்தில் தற்கொலைத் தாக்குதல்!

இந்தோனிசிய காவல்நிலையத்தில் தற்கொலைத் தாக்குதல்!

593
0
SHARE
Ad

indonesia-java-ஜகார்த்தா – இந்தோனிசிய நகரான சோலோவில் இன்று செவ்வாய்கிழமை, காவல்நிலையம் ஒன்றில், இருசக்கர வாகனத்தில் நுழைந்த தீவிரவாதி ஒருவன், நடத்தியத் தற்கொலைத் தாக்குதலில், அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளார்.

ஜாவா தீவில் அந்நாட்டு நேரப்படி காலை 7.35 மணியளவில், காவல்நிலையத்தின் வளாகத்திற்குள் அந்நபர் தனது இருசக்கரவாகனத்தில் அத்துமீறி நுழைந்ததாக காவல்துறைத் தரப்பில் பாய் ராப்லி அமர் தெரிவித்துள்ளார்.

“அவன் காவல்நிலையத்தின் உணவகத்திற்குள் நுழைய வேண்டும் என்று எண்ணினான். வலுக்கட்டாயமாக அந்த முயற்சியைச் செய்த அவன், இறுதியில் தன்னைனை வெடிக்கச் செய்து தற்கொலைத் தாக்குதல் நடத்தினான்” என்று மெட்ரோரோ தொலைக்காட்சிக்கு அளித்தப் பேட்டியில் காவல்துறையைச் சேர்ந்த பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice