Home Featured இந்தியா மோடியின் அமைச்சரவை மாற்றம்! புதிய அமைச்சர்கள் யார்?

மோடியின் அமைச்சரவை மாற்றம்! புதிய அமைச்சர்கள் யார்?

907
0
SHARE
Ad

Narendra Modi

புதுடில்லி – (மலேசிய நேரம் பிற்பகல் 2.00 மணி நிலவரம்) இன்று செவ்வாய்க்கிழமை இந்திய நேரப்படி காலை 11.00 மணியளவில் (மலேசிய நேரம் பிற்பகல் 1.30) பதவியேற்ற நரேந்திர மோடியின் மாற்றியமைக்கப்பட்ட புதிய அமைச்சரவையில் இடம் பெறுபவர்கள் – விலகுவர்கள் குறித்த ஆகக் கடைசியான தகவல்கள்:

  • சட்ட அமைச்சர் சதானந்த கவுடா நீக்கப்படலாம் என ஆரூடங்கள் வெளியாகியுள்ளன.
  • மோடியின் நான்கு முக்கிய அமைச்சர்களில் மாற்றம் இல்லை. நிதியமைச்சர் அருண் ஜெட்லி, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தற்காப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர் ஆகியோரின் பதவிகளில் மாற்றம் இல்லை.
  • இதுவரை இணை அமைச்சராகப் பணியாற்றி வந்த பிரகாஷ் ஜவடேகர் முழு அமைச்சராக (காபினெட் அமைச்சர்) நியமிக்கப்பட்டுள்ளார்.
  • மேற்கு வங்காளத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். அலுவாலியா, கர்நாடகா மாநிலத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் சண்டப்பா ஜிகாஜிகாஜி, மற்றும் மத்திய பிரதேச நாடாளுமன்ற உறுப்பினர் பாகான் குலஸ்தே, ராஜஸ்தான் மாநில மேலவை உறுப்பினர் (ராஜ்ய சபா) விஜய் கோயல் ஆகியோர் முழு அமைச்சர்களாக (காபினெட்) நியமனம்.
  • ராமதாஸ் அதவாலே முழு அமைச்சராக நியமனம்
  • மத்திய பிரதேசத்தின் ராஜ்ய சபா உறுப்பினர் அனில் மாதவ் தவே, குஜராத் மாநிலத்தின் ராஜ்ய சபா உறுப்பினர் பர்ஷோத்தம் ரூபலா, குஜராத் மாநிலத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜஸ்வந்த்சின் பாபோர், மகேந்திர நாத் பாண்டே ஆகியோர் இணை அமைச்சர்களாக  நியமனம்.
  • உலகப் புகழ் பெற்ற பிரபல பத்திரிக்கையாளரும், மத்தியப் பிரதேச மாநிலத்தின் ராஜ்ய சபா உறுப்பினரும் ஆன எம்.ஜே.அக்பர் இணை அமைச்சராக நியமனம்.
  • ராஜஸ்தான் மாநிலத்தின் நாடாளுமன்ற உறுப்பினரான அர்ஜூன் மேக்வால் இணை அமைச்சராக நியமனம். இவர் சைக்கிளில் தனது ஆதரவாளர்கள், பாதுகாவலர்கள் புடைசூழ அதிபர் மாளிகையை வந்தடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
  • உத்தரப் பிரதேச நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி கிருஷ்ண ராஜ் இணை அமைச்சராக நியமனம்

(மேலும் செய்திகள் தொடரும்)