Home Featured இந்தியா புதிய இந்திய அமைச்சரவை : முக்கிய மாற்றங்கள்!

புதிய இந்திய அமைச்சரவை : முக்கிய மாற்றங்கள்!

619
0
SHARE
Ad

புதுடில்லி – நேற்று செவ்வாய்க்கிழமை புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டதைத் தொடர்ந்து தனது புதிய அமைச்சரவையில் நரேந்திர மோடி செய்துள்ள முக்கிய மாற்றங்கள்:

arun jatly350

அருண் ஜெட்லி

  • அருண் ஜெட்லி வசம் இருந்த தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சு இனி வெங்கையா நாயுடுவின் பொறுப்பில் இயங்கும். தான் வகித்து வந்த நாடாளுமன்ற விவகார அமைச்சிலிருந்து வெங்கையா நாயுடு விடுவிக்கப்பட்டுள்ளார்.
  • வெங்கையா நாயுடு வகித்து வந்த நாடாளுமன்ற விவகார அமைச்சராக இனி ஆனந்த் குமார் பொறுப்பேற்கின்றார். ஆனந்த் குமார் இராசயன, உரங்கள் அமைச்சையும் நிர்வகிப்பார்.
  • அருண் ஜெட்லி தொடர்ந்து நிதி அமைச்சராகத் தொடர்வார்
  • மனித வள அமைச்சராக இருந்த ஸ்மிருதி ராணி (படம்) ஜவுளித்  துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். தனது பதவிக் காலத்தில் இவர் பல சர்ச்சைகளில் சிக்கினார்.Smirthi Irani 2 440 x 215
  • புதிய மனித வள அமைச்சராக பிரகாஷ் ஜவடேகர் நியமனம்.
  • விளையாட்டுத் துறை அமைச்சராக விஜய் கோயல் பொறுப்பேற்கின்றார்.
  • வி.கே.சிங் புள்ளிவிவரம் மற்றும் திட்ட அமுலாக்க அமைச்சிலிருந்து விடுவிக்கப்பட்டு, வெளியுறவு அமைச்சின் இணை அமைச்சராகத் தொடர்வார்
  • சட்ட அமைச்சரான சதானந்த கவுடா சட்ட அமைச்சர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இனி அவர் புள்ளிவிவரம் மற்றும் திட்ட அமுலாக்க அமைச்சராக மட்டும் பணியாற்றுவார்.
  • ரவி ஷங்கர் பிரசாத் முக்கியமான சட்ட அமைச்சகத்தை இனி நிர்வகிப்பார். ரவி ஷங்கர் பிரசாத் ஒரு வழக்கறிஞருமாவார். எனினும் மின்னியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சையும் அவர் தொடர்ந்து நிர்வகித்து வருவார்.
  • மின்ஆற்றல், நிலக்கரி, மறுபயனீட்டு சக்தி, ஆகிய அமைச்சுப் பொறுப்புகளை வகித்து வரும் பியுஷ் கோயல் இனி சுரங்கத் துறைக்கும் பொறுப்பேற்கவுள்ளார்.
  • மனோஜ் சின்ஹா – முன்பு இரயில்வே துறைக்கான துணை அமைச்சராக இருந்தவர் தற்போது, தொலைத் தொடர்பு துறைக்கு பொறுப்பேற்கின்றார்.
  • அனில் தவே புதிய சுற்றுச் சூழல் அமைச்சராகப் பொறுப்பேற்கின்றார்.