Home Featured நாடு தாமான் ஓயுஜி துப்பாக்கிச் சூடு: தனக்கு ஆபத்து இருப்பதை முன்பே அறிந்திருந்த வோங்!

தாமான் ஓயுஜி துப்பாக்கிச் சூடு: தனக்கு ஆபத்து இருப்பதை முன்பே அறிந்திருந்த வோங்!

947
0
SHARE
Ad

oug-murder-160706-006கோலாலம்பூர் – கடந்த புதன்கிழமை தாமான் ஓயுஜி அருகே, மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட வீடு விற்பனை முகவர் வோங், தனக்கு நேரப்போகும் ஆபத்தை முன்பே அறிந்துள்ளார்.

தனக்கு ஏதேனும் நடந்தால், தனது குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளும்படி தனது சகோதரிக்கு முன்பே தகவல் அனுப்பியிருக்கிறார் என வோங்கின் கணவர் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சுட்டுக் கொல்லப்பட்ட வோங், பல்வேறு தொழில்களில் முதலீடு செய்து வந்துள்ளார்.

#TamilSchoolmychoice

கடந்த ஆண்டு, ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதம், புதிய நபர் ஒருவரின் அறிமுகம் கிடைக்க, அவர் சொன்ன தொழில் ஒன்றில் தனது நண்பர்களுடன் சேர்ந்து முதலீடு செய்திருக்கிறார்.

ஆனால் அந்நபர் அம்முதலீடு பணத்துடன் தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகின்றது.

அதனால், தனியார் துப்பறிவாளர் ஒருவரை நியமனம் செய்து, அந்நபரைத் தேடிக் கண்டறிந்து, தங்களது பணத்தை மீட்க வோங் மற்றும் அவரது நண்பர்கள் திட்டமிட்டுள்ளனர்.

என்றாலும், அந்நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு முன்பே வோங் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

மேலும், வோங்கின் கணவர் காவல்துறையிடம் தெரிவித்துள்ள தகவலில், தனக்கு அந்தத் தொழிலதிபர் குறித்து எதுவும் தெரியாது என்றும், தான் சீனாவில் தொழில் ஒன்றை கவனிப்பதில் பரபரப்பாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த விவகாரத்தில் தற்போது காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றது.

இந்நிலையில், வோங் சுட்டுக் கொல்லப்பட்ட போது, அவருடன் காரில் இருந்த அவரது பிள்ளைகளில் ஒருவருக்கும் குண்டடி பட்டுள்ளது.

மலாயா மருத்துவப் பல்கலைக்கழகத்தில் அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்று தற்போது தீவிரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

காரில் இருந்த மற்ற 4 பிள்ளைகள் மற்றும் வீட்டுப் பணிப் பெண்ணுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என காவல்துறைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.