Home Featured நாடு குற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ் சஞ்சீவனுக்கு 60 நாள் காவல்!

குற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ் சஞ்சீவனுக்கு 60 நாள் காவல்!

650
0
SHARE
Ad

SANJEEVAN-685x320கோலாலம்பூர் – கொலை மிரட்டல் மற்றும் மிரட்டிப் பணம் பறித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், குற்றத் தடுப்புச் சட்டம் 1959 (POCA) -வின் கீழ் மைவாட்ச் தலைவர் டத்தோ ஆர்.ஸ்ரீ சஞ்சீவன் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை 4.30 மணியளவில் காஜாங் மாவட்ட காவல்துறைத் தலைமையகத்தில் அவர் தடுத்து வைக்கப்பட்டதாக புக்கிட் அம்மான் டி7 பிரிவு துணை இயக்குநர் எஸ்ஏசி ரோஸ்லீ சீக் தெரிவித்துள்ளார்.

போச்சா சட்டப் பிரிவு 3(1)-ன் கீழ், அவர் 60 நாட்களுக்கு தடுத்து வைக்கப்படுவார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice