ஹூஸ்டன் – சிறையில் காவலர் ஒருவர் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கையில், அங்கிருந்த கைதிகள் சிலர் சிறைக் கதவை உடைத்து வெளியே வந்து அவருக்கு உதவி செய்துள்ள சம்பவம் அமெரிக்கர்களை நெகிழ வைத்துள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம், போர்ட் வொர்த் நகரில் உள்ள மாவட்ட நீதிமன்ற கட்டிடத்தில் இயங்கி வரும் சிறையில், சம்பவத்தன்று 8 கைதிகள் அடைக்கப்பட்டிருந்துள்ளனர்.
அவர்களைக் காவல்காக்கும் பணியில் காவலர் ஒருவர் இருந்துள்ளார். சிறைக் கதவிற்கு முன்பு அவர் நாற்காலி ஒன்றில் அமர்ந்து கைதிகளுடன் நகைச்சுவையாகப் பேசிக் கொண்டிருந்த வேளையில், அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு சரிந்து விழுந்துள்ளார்.
அதைப் பார்த்த கைதிகள் கூச்சலிட்டு மற்ற காவலர்களை உதவிக்கு அழைத்துள்ளனர்.
ஆனால் அங்கு யாரும் வராமல் போகவே, கைதிகளில் ஒருவர் சிறைக் கதவை உடைத்துள்ளார். அதனையடுத்து கைதிகள் அனைவரும் சரிந்து விழுந்து கிடந்த காவலரை நெருங்கி, அவருக்கு முதலுதவி செய்ய முயற்சி செய்துள்ளனர்.
அதற்குள் மற்ற காவலர்களை அங்கு வந்து நிலைமையை அறிந்து உடனடியாக அக்காவலரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.
அந்தக் காணொளியை இங்கே காணலாம்:-
https://www.youtube.com/watch?v=aYkl5C-QgnA