Home Featured கலையுலகம் நடிகர் விக்ரம் மகள் திருமண நிச்சயதார்த்தம் (படத்தொகுப்பு)

நடிகர் விக்ரம் மகள் திருமண நிச்சயதார்த்தம் (படத்தொகுப்பு)

1355
0
SHARE
Ad

Vikram daughterசென்னை – நடிகர் விக்ரமின் மகள் அக்ஷிதாவிற்கும், கெவின் கேர் நிறுவன தொழிலதிபர் சி.கே. ரங்கநாதனின் மகன் மனு ரஞ்சித்திற்கும், நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்னையிலுள்ள பிரபல நட்சத்திர விடுதியில் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெற்றது.

Vikram daughter1இந்நிகழ்ச்சியில் திமுக தலைவர் கருணாநிதி கலந்து கொண்டு, அவர்களை வாழ்த்தினார். மேலும் இந்நிகழ்ச்சியில் நடிகர் விக்ரமின் நண்பர்கள், உறவினர்கள், திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

Vikram daughter2

#TamilSchoolmychoice

மாப்பிள்ளை மனு ரஞ்சித், திமுக தலைவர் கருணாநிதியின் குடும்ப வாரிசும் ஆவார். அவர் கருணாநிதிக்குக் கொள்ளுப் பேரன் முறையாகிறார்.

அதாவது கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்துவின் மகள் தேன்மொழியின் மகன் தான் மனு ரஞ்சித் என்பது குறிப்பிடத்தக்கது.

Vikram daughter 7

Vikram daugher5

இந்நிலையில், திருமண நிச்சயதார்த்தம் நேற்று நடைபெற்றாலும் கூட, திருமணம் அடுத்த ஆண்டு தான் நடைபெறும் என்று தகவல்கள் கூறுகின்றன.