Home Featured கலையுலகம் மலேசியாவில் கபாலியைக் கண்டுபிடித்தது எப்படி? – பா.இரஞ்சித் சொல்லும் இரகசியம்!

மலேசியாவில் கபாலியைக் கண்டுபிடித்தது எப்படி? – பா.இரஞ்சித் சொல்லும் இரகசியம்!

824
0
SHARE
Ad

ranji-kabaliகோலாலம்பூர் – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வரும் ஜூலை 22-ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவிருக்கும் படம் ‘கபாலி’.

மலேசியாவில் வாழ்ந்த டானை அடிப்படையாக வைத்து கதையை உருவாக்கியுள்ளார் அப்படத்தின் இயக்குநர் பா.இரஞ்சித்.

இந்நிலையில், அண்மையில் ஆனந்த விகடனுக்கு இரஞ்சித் அளித்துள்ள பேட்டி ஒன்றில், இந்தக் கதையை உருவாக்கியது எப்படி என்பதற்கு விளக்கமளித்துள்ளார்.

#TamilSchoolmychoice

அது குறித்து இரஞ்சித் கூறியிருப்பதாவது:-

‘‘நான் ‘கோவா’ படத்துல உதவி இயக்குநரா வேலைசெய்யும்போது மலேசியாவில் 35 நாட்கள் தங்கியிருந்தேன். அங்கே வாழ்கிற இங்கே இருந்து பிழைக்கப் போன தமிழர்களின் வாழ்க்கையைப் படிச்சேன். நிச்சயமா இவர்கள் வாழ்ந்த, வாழ்கிற போராட்டத்தை சினிமாவா எடுக்கணும்னு எனக்கு அப்பவே ஒரு எண்ணம். அது சம்பந்தமா நிறைய நோட்ஸ் எடுத்து வைத்துக்கொண்டேன். `ரஜினி சாருக்குக் கதை வேணும்’னு அவரது மகள் செளந்தர்யா கேட்டப்போ, `சூப்பர் நேச்சுரல் சயின்ஸ் ஸ்டோரி, கேங்ஸ்டர் கதைனு ரெண்டு ஒன்லைன் இருக்கு’னு சொன்னேன். `நார்த் மெட்ராஸ் கேங்ஸ்டர் கதையா?’னு கேட்டாங்க. `இல்லை, மலேசிய டான் கதை’னு சொன்னேன். அடுத்து அந்தக் கதையை ரஜினி சாரிடம் சொன்னதும் அவருக்கும் பிடித்துவிட்டது. `உடனே வேலையை ஆரம்பிங்க’னு சொல்லிட்டார்.” என்று இரஞ்சித் தெரிவித்துள்ளார்.

kabali1மேலும், சென்னையில் இருந்து மலேசியாவுக்குச் செல்லும் டான் தான் கபாலியா? என்ற கேள்விக்குப் பதிலளித்துள்ள இரஞ்சித், “சென்னையில் இருந்து மலேசியாவுக்குச் செல்ல வில்லை. மலேசியாவில் இருந்து சென்னைக்கு வருகிறார் ‘கபாலி’. இது முழுக்க முழுக்க மலேசிய வாழ் தமிழர்களின் கதை. மலேசியா, மலைகள் மிகுந்த நாடு. அங்கு உள்ள நிலத்தைச் சீர்செய்து செப்பனிடுவதுதான் தமிழர்களின் பிரதான தொழில்.”

“ஒடுக்கப்பட்ட சமூகத்தில் வாழ்கிறவர்களுக்கு இயல்பாகவே கோபம் அதிகம் இருக்கும். மலேசியாவில் வாழும் தமிழர்கள் தங்கள் தேவைகளைப் பூர்த்திசெய்யவும் பாதுகாக்கவும் ஒரு தலைவனைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அப்படி தன்னிச்சையான தலைவனாக உருவானவர்களில் ஒருவர்தான் ‘கபாலி’. கோபக்கார டான் என்றாலும், அதையும் தாண்டி தன் குடும்பத்தின் மீது அவர் வைத்திருக்கும் பாச முகம் ஒண்ணு இருக்கு. அதைப் படத்துல பார்க்கும்போது அப்படியே நெகிழ்ந்துபோயிடுவீங்க.”

“மதுரை, சென்னை, திருச்சி, விழுப்புரம், திண்டிவனம் பகுதியில் இருந்துதான் நிறையத் தமிழர்கள் மலேசியாவில் குடிபெயர்ந்திருக்காங்க. அவங்க பேசுகிற மலேசியத் தமிழே தனி அழகு. ‘கபாலி’ படத்துல மலாய், சீன மொழிகள் பேசும் கேரக்டர்கள் வரும். படத்தோட உயிர்த்தன்மை கெட்டுப்போகக் கூடாதுனு அந்த கேரக்டர்களை அந்தந்த மொழிகளிலேயே பேசவைத்திருக்கிறோம்.” என்றும் இரஞ்சித் தெரிவித்துள்ளார்.