விஜயனின் மனைவி சுதாவின் தங்கை பானு, காவலர் கருணாவின் உதவியோடு, கூலிப்படையை அமர்த்தி விஜயனைக் கொலை செய்துள்ளது நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து நீதிபதி ஜெயசந்திரன் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.
சுதா எம்ஜிஆரின் வளர்ப்பு மகள் ஆவார். அவரது கணவரான விஜயன் கடந்த 2008-ம் ஆண்டு, சென்னை கோட்டூர்புரம் அருகே கொலை செய்யப்பட்டார்.
இந்நிலையில், இந்தத் தீர்ப்பு தனக்கு ஆறுதல் அளிப்பதாக சுதா நேற்று நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இந்த தீர்ப்பை தொடர்ந்து, தண்டனை பெற்ற பானு உள்பட 7 பேரையும் புழல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவின் அடிப்படையில், நேற்று இரவு 7 பேரையும் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று புழல் சிறையில் போலீசார் அடைத்தனர்.