Home Featured நாடு பினாங்கில் 4 பேரைக் கொன்றவன் காவல் துறையால் சுட்டுக் கொல்லப்பட்டான்!

பினாங்கில் 4 பேரைக் கொன்றவன் காவல் துறையால் சுட்டுக் கொல்லப்பட்டான்!

607
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன் – நேற்று புதன்கிழமை பத்து மாவுங் என்ற பகுதியில் நான்கு பேரைச் சுட்டுக்கொன்ற துப்பாக்கிக்காரன் இன்று பினாங்கில் காவல் துறையினருடன் நடந்த சண்டையில் சுட்டுக் கொல்லப்பட்டான்.

பினாங்கில் ஆயர் ஈத்தாமில் காவல் துறையினருடன் அந்தத் துப்பாக்கிக்காரன் மோதலில் ஈடுபட்டான் என்றும் அதன் காரணமாக சுட்டுக் கொல்லப்பட்டான் என்றும் காவல் துறைத் தலைவர் (ஐஜிபி) டான்ஸ்ரீ காலிட் அபு பாக்கார்  தெரிவித்துள்ளார்.

khalid-abu-bakar.gifநேற்று இரண்டு வயது குழந்தை ஒருவன் உட்பட நால்வரைத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற அந்தத் துப்பாக்கிக்காரன், போதைப் பித்தன் என்றும் காவல் துறையினர் அறிவித்துள்ளனர். மிகவும் நெருக்கமான தூரத்தில் இருந்து நால்வரையும் அந்தத் துப்பாக்கிக்காரன் சுட்டுக் கொன்றிருக்கின்றான்.

#TamilSchoolmychoice

அந்தத் துப்பாக்கிக்காரன் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட தகவலை டான்ஸ்ரீ காலிட் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

முழுவிவரங்களையும் பினாங்கு காவல் துறையின் குற்றப் புலனாய்வுத் துறை தலைவர் டத்தோ ரசாருடின் ஹூசேன் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.