Home Featured நாடு செந்துல் அருகே வெடிபொருள் கண்டுபிடிப்பு!

செந்துல் அருகே வெடிபொருள் கண்டுபிடிப்பு!

500
0
SHARE
Ad

கோலாலம்பூர் – தலைநகர் செந்துல் அருகே சாலையோரத்தில் வெடிபொருள் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

bomb-sample-மாதிரி வெடிகுண்டு…(கோப்புப் படம்)

கடந்த புதன்கிழமை மாலை 4.35 மணியளவில் பொதுமக்களில் ஒருவர் அளித்த தகவலின் அடிப்படையில், லோரோங் கோலம் ஆய்ர் 9 அருகே, செந்துல் இரயில் தண்டவாளத்திற்கு அருகில் உள்ள சாலையோரத்தில் இந்த வெடிபொருளை அதிகாரிகள் கண்டெடுத்துள்ளனர்.

#TamilSchoolmychoice

இதனை கோலாலம்பூர் காவல்துறைத் தலைமை ஆணையர் டத்தோ அமர் சிங்கும் உறுதிப்படுத்தியுள்ளார்.

தற்போது காவல்துறை இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றது.