Home Featured கலையுலகம் அமெரிக்க ஆலயத்தில் ரஜினி வழிபாடு!

அமெரிக்க ஆலயத்தில் ரஜினி வழிபாடு!

745
0
SHARE
Ad

சென்னை – உலகம் எங்கும் கபாலி காய்ச்சல் உச்சகட்டத்தில் பரவியிருக்கும் நிலையில் ரஜினி எங்கே இருக்கின்றார் – எப்போது சென்னை திரும்புவார் – என்பது குறித்த ஆரூடங்கள் தொடர்ந்து பரவி வருகின்றன.

அமெரிக்காவில் உள்ள சச்சிதானந்தர் ஆலயத்தில் ரஜினியும், அவரது மூத்த மகள் ஜஸ்வர்யாவும் வழிபாடு நடத்தும் புகைப்படம் ஒன்றை ஜஸ்வர்யா சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

Rajnikanth-USA-

#TamilSchoolmychoice

இந்தப் புகைப்படத்தைப் பார்க்கும்போது, அவரது உடல்நிலை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அவர் நலமுடன் இருப்பது தெரிகின்றது.

இருப்பினும் ரஜினி எப்போது சென்னை திரும்புவார் என்பது குறித்த தகவல்கள் இதுவரை இல்லை. எனினும் கபாலி திரையீடு காணும் ஜூலை 22ஆம் தேதிக்கு முன்பாக அவர் சென்னை வந்துவிடுவார் என்றும், முன்கூட்டியே அவர் வரும் தேதி தெரிந்தால் விமான நிலையத்தில் பெரும் கூட்டம் திரளக்கூடும் என்பதால், அவரது வருகை இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கபாலி திரையீட்டை முன்னிட்டு, படத்தின் பெரும்பகுதி எடுக்கப்பட்ட மலேசிய நாட்டிற்கும் ரஜினி வருகை தருவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகின்றது.