Home Featured நாடு மஇகா மத்திய செயலவைக் கூட்டம் – முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படுமா?

மஇகா மத்திய செயலவைக் கூட்டம் – முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படுமா?

598
0
SHARE
Ad

Dr Subra - MIC PRESIDENTகோலாலம்பூர் – மஇகாவின் மத்திய செயலவைக் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை மாலை மஇகா தலைமையகக் கட்டிடத்தில் நடைபெறுகின்றது.

கூட்டத்திற்குப் பின்னர் மாலை 5.00 மணியளவில் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றையும் நடத்துகின்றார்.

தற்போது கட்சிக்கு வெளியே இருந்து போராடிக் கொண்டிருக்கும் அணியினரில் சிலர் மீண்டும் மஇகாவுக்குள் திரும்பக் கூடும் என்ற ஆரூடங்கள் வலுத்து வரும் வேளையில், இன்று நடைபெறும் மத்திய செயலவைக் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்புகளும் நிலவுகின்றது.

#TamilSchoolmychoice

மஇகாவின் 70ஆம் ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடும் ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதால் அது குறித்த சில முடிவுகளும் இன்றைய மத்திய செயலவைக் கூட்டத்தில் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.