கோலாலம்பூர் – இரண்டு வாரத்திற்கு முன்பு தாமான் ஓயுஜியில், தொழிலதிபர் டத்தின் வோங் சியூ லிங்கை, சுட்டுக் கொன்றது இரு கூலிப்படையினர் என்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
இக்கொலையைச் செய்வதற்காக அவர்கள் 100,000 ரிங்கிட் (ஒரு லட்சம் ரிங்கிட்) பெற்றுள்ளதாகவும் காவல்துறையில் தரப்பில் இருந்து தகவல் கசிந்துள்ளது.
அந்த இருவர் தான் இதற்கு முன்பு பேராக், சிலாங்கூர், கோலாலம்பூர் ஆகிய பகுதிகளில் நடந்த மூன்று துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களிலும் ஈடுபட்டிருந்ததாகவும் விசாரணையின் முடிவு தெரிவிக்கின்றது.
இந்நிலையில், இச்சம்பவத்தில் தொடர்புடையதாக நம்பப்படும் 8 பேரை செவ்வாய்கிழமை காவல்துறைக் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.