Home Featured உலகம் அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் வேட்பாளராக வரலாறு படைத்தார் ஹிலாரி!

அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் வேட்பாளராக வரலாறு படைத்தார் ஹிலாரி!

738
0
SHARE
Ad

hilary-clintonவாஷிங்டன் – அமெரிக்காவின் ஜனநாயக கட்சியினர் நேற்று செவ்வாய்க்கிழமை தங்களின் அதிகாரத்துவ அதிபர் வேட்பாளராக ஹிலாரி கிளிண்டனைத் தேர்ந்தெடுத்ததைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் தேர்தலில் களமிறங்கும் முதல் பெண் வேட்பாளராக ஹிலாரி வரலாறு படைத்துள்ளார்.

எதிர்வரும் நவம்பர் 4ஆம் தேதி நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரிக்கும், குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்ட் டிரம்புக்கும் இடையிலான போட்டி கடுமையானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.