Home Featured நாடு அமெரிக்க அறிக்கையில் 1எம்டிபி நேரடியாகச் சம்பந்தப்படவில்லை – நஜிப் கூறுகின்றார்!

அமெரிக்க அறிக்கையில் 1எம்டிபி நேரடியாகச் சம்பந்தப்படவில்லை – நஜிப் கூறுகின்றார்!

668
0
SHARE
Ad

Najib-கோலாலம்பூர் – அமெரிக்க நீதித்துறையின் அறிக்கையில், அரசாங்கத்தின் வியூக முதலீட்டு நிறுவனமான 1எம்டிபி, நேரடியாக சம்பந்தப்படவில்லை என மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார்.

மலேசிய அரசாங்கத்திடமிருந்தோ, தலைமை வழக்கறிஞர் மன்றத்திடமிருந்தோ அல்லது 1எம்டிபி இடமிருந்தோ, எந்த ஒரு பார்வையையோ அல்லது தகவலையோ அந்த அறிக்கை கொண்டிருக்கவில்லை என்றும் நஜிப் தெரிவித்துள்ளார்.

மேலும், அமெரிக்காவில் 1எம்டிபி-க்கு சொத்துகள் எதுவும் இல்லை என்றும், அந்த அறிக்கையில் 1எம்டிபியின் பெயர் நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை என்றும் நஜிப் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற அம்னோ உச்சமன்றக் கூட்டத்திற்குப் பிறகான செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice