Home Featured நாடு குண்டர் கும்பலுடன் தொடர்புடைய அதிகாரிகள் தண்டிக்கப்படுவார்கள் – துணை ஐஜிபி உறுதி!

குண்டர் கும்பலுடன் தொடர்புடைய அதிகாரிகள் தண்டிக்கப்படுவார்கள் – துணை ஐஜிபி உறுதி!

556
0
SHARE
Ad

Noor Rashid Ibrahimகோலாலம்பூர் – குண்டர் கும்பல்களைப் பாதுகாக்கும் படியான எந்த ஒரு செயலையும் காவல்துறை செய்வதில்லை என தேசியக் காவல்படையின் துணை ஆணையர் டான்ஸ்ரீ நூர் ரஷிட் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

அது சட்டத்திற்குப் புறம்பானது மற்றும் கடமைகளை மீறுவது என்று காவல்துறை அதிகாரிகளுக்கு நன்றாகத் தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“நாங்கள் இந்த விவகாரத்தை தீவிரமாக விசாரணை செய்கின்றோம். காவல்துறையின் படைகள் மூலம் குண்டர் கும்பல்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று”

#TamilSchoolmychoice

“இதுவரையில், குண்டர் கும்பலுக்கு காவல்துறையினர் உடந்தையாக இருப்பதாகத் தெரியவில்லை. அது அவர்களது கடமைக்கு முற்றிலும் எதிரானது” என்று ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் பேசுகையில் நூர் ரஷிட் தெரிவித்துள்ளார்.

மேலும், காவல்துறை அதிகாரிகள் குண்டர் கும்பலுக்கு உடந்தையாக இருப்பது தெரியவந்தால், கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்றும் நூர் ரஷிட் குறிப்பிட்டுள்ளார்.